சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்! மேகதாது அணை விவகாரம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை?
Sakthibhavaniselvaraj
· 1 min read

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று (நவம்பர் 16) சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
டெல்லியில் இன்று மாலை 6 மணியளவில் நடைபெறவுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான கர்நாடகா, கேரளா மற்றும் தெலங்கானா மாநில முதலமைச்சர்களும் விழாவில் கலந்துகொள்ள உள்ளனர்.
இதற்கிடையே, கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமாரும் இந்த விழாவில் பங்கேற்க இருப்பதால், அவரைச் சந்தித்து மேகதாது அணை விவகாரம் குறித்து தமிழக முதலமைச்சர் விஜய் பேச வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழகத்தில் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விஜய் என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்தப் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று இரவு 11 மணியளவில் முதலமைச்சர் விஜய் மீண்டும் சென்னை திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












