முதியோர் ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளி பரிசு – இலவச வேட்டி, சேலை விநியோகம் தொடக்கம்!
Sakthibhavaniselvaraj
· 1 min read

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் பணி தொடங்கியுள்ளது. தமிழக அரசு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையையொட்டி இந்த நலத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, 2026ஆம் ஆண்டு தீபாவளிக்காக கொள்முதல் செய்யப்பட்ட வேட்டி, சேலைகள் மாநிலம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நவம்பர் 3ஆம் தேதி முதல் இந்த விநியோகம் தொடங்கியுள்ளது.
முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்ப அட்டைதாரர்கள் தங்களது குடும்ப அட்டையுடன் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளுக்கு நேரில் சென்று இலவச வேட்டி, சேலைகளைப் பெற்றுக்கொள்ளலாம். இதற்கான கடைசி தேதியாக நவம்பர் 7ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயனாளிகளுக்கு எவ்வித தாமதமுமின்றி பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய கூட்டுறவுத் துறை அதிகாரிகள் விநியோகப் பணிகளைக் கண்காணித்து வருகின்றனர். எனவே, தகுதியுள்ள முதியோர் ஓய்வூதியதாரர்கள் நவம்பர் 7ஆம் தேதிக்குள் தங்களுக்கான வேட்டி, சேலைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்













