நேருக்கு நேர் மோதிய பேருந்து – லாரி… 24 பேர் உ*யிரிழப்பு!
Sakthibhavaniselvaraj
· 1 min read

அசாம் மாநிலம் காசிரங்கா பகுதியில் லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விபத்தில் பெரும்பாலானோர் கல்லூரி மாணவர்கள் எனக் கூறப்படுகிறது. கோலாகாட் மாவட்டம் ரங்காஜன் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 715-ல் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கோலாகாட்டில் இருந்து நாகாவோன் நோக்கிச் சென்ற மினி பேருந்து, எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது நேருக்கு நேர் மோதியுள்ளது.
மோதலின் வேகத்தில் பேருந்து பலத்த சேதமடைந்ததுடன், சில பயணிகள் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். இதையடுத்து காவல்துறையினரும் பொதுமக்களும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து அதிவேகமாகச் சென்றதே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












